
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டியிலும் ல இந்திய அணி சொதப்பினாலும் ஒரே ஒரு நல்ல விசயம் மட்டும் நடந்துள்ளது.
இதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இந்த நட்சத்திரம் இடம்பெற்றே ஆக வேண்டும் என்று கவாஸ்கர், கிரேம் ஸ்மித் கூறிவுள்ளனர். அவர் வேறு யாரும் இல்லை. நம் புவனேஸ்வர் குமார் தான். புவனேஸ்வர் குமார் 4 ஓவரில் 13 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
புது பந்தை பயன்படுத்திய புவனேஸ்வர் குமார் முதல் ஓவரிலேயே ஹெண்டரிக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதே போன்று அவருடைய 2ஆவது ஓவரில் நக்கில் பந்தை வீசி பிரிட்டோரியஸ் விக்கெட்டை கைப்பற்றினார். இதே போன்று பவர்பிளேவின் கடைசி ஓவரில் வெண்டர்டுசனை வீழ்த்தினார். இதன் மூலம் பவர் பிளேவில் 3 ஓவரில் 10 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் வீழ்த்தி இருக்கிறார்.