Advertisement
Advertisement
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 10, 2024 • 11:20 AM
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு! (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரிம் 17ஆம் தேதி தொடங்குகிறது,

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Trending


மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக செயல்படவுள்ளார். மேலும் ஒருநாள் அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மேத்யூ ரென்ஷா, ஸ்டீஸ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: ஸ்டிவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், நாதன் எல்லீஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், லேன்ஸ் மோரிஸ், ஜெய் ரிச்சர்ட்சன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஸாம்பா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement