கேமரூன் க்ரீன் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் - நாதன் லையன்!
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பின்னர் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனின் நடவடிக்கைகளில் சிறந்த மாற்றங்களை கண்டதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையன் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் நீண்ட நாள்களாக இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், கேமரூன் க்ரீன் மற்றும் ஹேசல்வுட் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடிய பின், இங்கிலாந்து சென்றனர். இதில் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன், இந்திய அணிக்கு சவால் அளிப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 2019ஆம் ஆண்டு முதலே ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் க்ரீனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஆஷஸ் தொடரில் சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். அதன்பின்னர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த போது, அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக சதம் விளாசி ஆச்சரியம் கொடுத்தார்.
Trending
கேமரூன் க்ரீன் உயரம் அவரின் பேட்டிங்கிற்கு அதிக உதவியாக அமைந்துள்ளது. அதேபோல் 6ஆவது வீரராக களமிறங்குவதால் அதிரடி விளையாட ஆஸ்திரேலிய அணியில் லைசன்ஸ் வழங்கியுள்ளது அவரை அபாயகரமான வீரராக மாற்றியுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் 452 ரன்களை விளாசி சிறப்பாக செயல்பட்ட கேமரூன் க்ரீன், மீண்டும் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்த போது ஏராளமான மாற்றங்களை கண்டதாக நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நேதன் லையன், “அகமதாபாத் டெஸ்டில் சதம் விளாசியது மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பின் கேமரூன் க்ரீன் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நிச்சயமான அவரின் மனஉறுதி அதிகரித்துள்ளது நன்றாகா தெரிகிறது. இப்போதுதான் அவரின் உண்மையான முகத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now