இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு சேப்பல் காரணம் - சுரேஷ் ரெய்னா!
வெற்றி பெறுவது எப்படியென கற்றுக்கொடுத்தவர் கிரேக் சேப்பல் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியவர் ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல். இவரது பயிற்சியின் கீழான இந்திய அணி 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் படுதோல்வியை தழுவியது.
இதனால் கிரேக் சேப்பல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கபட்டது. இந்நிலையில், கிரேக் சேப்பல் குறித்து பேசியுள்ள சுரேஷ் ரெய்னா அவர் இல்லை என்றால் இந்திய அணியால் உலகக்கோப்பையை வென்றிருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய ரெய்னா, “கிரேக் சேப்பல் தலைமையின் கீழான இந்திய அணியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தோம். ஆனால் எங்களால் உலகக்கோப்பைத் தொடரில் அதனை சரியா செய்ய முடியவில்லை.
ஆனால் 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு சேப்பலின் பயிற்சியும் ஒரு காரணம. அவர் போட்டிகளில் எவ்வாறு வெல்வது என்பதை கற்றுக்கொடுத்தார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now