ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இந்த வெற்றியானது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முக்கிய என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் 4 வெற்றி, 7 தோல்வி என மொத்தம் 8 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
அணியின் பேட்டிங்கில் விருத்திமான் சாஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் உள்ளிட்ட வீரர்கள் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேபோல், ஷாருக் கான், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா உள்ளிட்ட வீரர்கள் ஓரளவுக்கு ரன் குவித்து வருவது அணிக்கு சற்று நம்பிக்கையளிக்கிறது. அதேபோல் பந்துவீச்சிலும் மோஹித் சர்மா, ரஷித் கான், மானவ் சுத்தர், ஜோஷுவா லிட்டில், நூர் அகமது போன்ற வீரர்கள் இருந்தாலும் அவர்கள் சிறப்பாக செயால்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஷாருக் கான், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், மானவ் சுதர், மோஹித் சர்மா, நூர் அகமது, ஜோசுவா லிட்டில்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த சீசனில் விளையாடியுள்ள 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளது. அந்த வெற்றியைத் தொடரும் முனைப்பில் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். அடுத்து வரும் 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நிச்சயம் உறுதிப்படுத்தி விடும் என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் கனவம் செலுத்தி வருகிரது
அணியின் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் அஜிங்க்ய ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி ஆகியோரும் இன்றைய ஆட்டத்தில் தங்கள் ஃபார்முக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், சிமர்ஜீத் சிங், ரிச்சர்ட் கிளீசன் ஆகியோர் எதிரணி வீரர்களுக்கு சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: அஜிங்கியா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், மகேந்திர சிங் தோனி, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, ரிச்சர்ட் கிளீசன்.
Win Big, Make Your Cricket Tales Now