Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!

குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 17, 2024 • 14:11 PM
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளும் கடந்த போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Trending


குஜராத் டைட்டன்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், ராகுல் திவேத்தியா போன்ற வீரர்கள் இருந்தாலும் மற்ற பேட்டர்களும் தொடர்ந்து சொதப்பி வருபது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் டேவிட் மில்லரும் காயத்தால் அவதிப்பட்டு வருவது அணிக்கு மேற்கொண்டு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அணியில் உள்ள மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேசமயம் அணியின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் நடப்பு சீசனில் மிகவும் வலுவான பந்துவீச்சை கொண்ட அணியாக குஜராத் அணி பார்க்கப்படுகிறது. அதிலும் ரஷித் கான், நூர் அஹ்மத் ஆகியோருடன் மோஹித் சர்மாவின் பந்துவீச்சும் எதிரணி பேட்டர்களுக்கு தொடர்ந்து சவலாக இருந்து வருகிறது. இருப்பினும் உமேஷ் யாதவ், ஸ்பென்ஸர் ஜான்சன் போன்ற வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் ரன்களை வாரி வழங்குவது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி வருவதையும் நாம்மால் மறுக்க முடியாது. 

குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), மேத்யூ வேட், அபினவ் மனோகர், விஜய் சங்கர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நூர் அஹ்மது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், மொஹித் சர்மா.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த சீசனில் பெரிதளவில் சிறப்பாக செயல்படவில்லை என்பது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. அந்த அணி இத்தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பந்த், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் வார்னர், பிரித்வி ஷாவும், பந்து வீச்சில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் ஷர்மாவும் நல்ல நிலையில் உள்ளனர்.

ஆனால் தற்போது அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரும் காயத்தை சந்தித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏற்கெனவே நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக சொந்தநாடு திரும்பியுள்ள நிலையில், தற்போது டேவிட் வார்னரின் காயம் அணிக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது. அதேசமயம் அறிமுக வீரரான ஜேக் ஃபிரெசர் மெக்குர்க்கின் சிறப்பான ஆட்டம் தற்ப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ரிஷப் பந்த் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷாய் ஹோப், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement