 
                                                    Gujarat Titans vs Kolkata Knight Riders, IPL 2024 Dream11 Team: ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் மீதம் 9 லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் கேகேஆர் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கான போட்டியானது கடுமையாக மாறியுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறும் 63ஆவது லீக் ஆட்டத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி இனிவரும் அனைத்து போட்டிகளில் வெல்வதுடன், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை வைத்தே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்துள்ளதால், அந்த அணி நிச்சயம் வெற்றிக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
GT vs KKR: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
- நேரம் - இரவு 7.30 மணி
GT vs KKR, Pitch Report
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        