ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் மீதம் 9 லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் கேகேஆர் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கான போட்டியானது கடுமையாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் 63ஆவது லீக் ஆட்டத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்விக்ளைச் சந்தித்து 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 8ஆம் இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி, பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் இருவரும் சதமடித்து அசத்தியுள்ளனர்.
இதனால் அந்த அணிக்கு சற்று கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் டேவிட் மில்லர், ஷாருக் கான், மேத்யூ வேட், ராகுல் திவேத்திய போன்ற பேட்டர்கள் இருப்பதும் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் ரஷித் கான், நூர் அஹ்மத் ஆகியோருடன் மொஹித் சர்மா, சந்தீப் வாரியர், கார்த்திக் தியாகி உள்ளிட்டோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), டேவிட் மில்லர், ஷாருக் கான், மேத்யூ வேட், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், மோஹித் சர்மா, சந்தீப் வாரியர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், விளையாடிய 19 போட்டிகளில் 9 வெற்றி, 3 தோல்விகள் என 18 புள்ளிகளைப் பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் அந்த அணி புள்ளிப்பட்டியளில் தனது முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டியது அவசிமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அணியின் பேட்டிங்கில் பில் சால்ட், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை குவித்து வருகின்றனர். இதில் சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடன் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோரும் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் அந்த அணி எதிரணிக்கு சவாலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: பில் சால்ட், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி
Win Big, Make Your Cricket Tales Now