Advertisement

ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் ட
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் ட (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 27, 2024 • 03:58 PM

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 45ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் முதல் முறையாக பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஆர்சிபி அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 27, 2024 • 03:58 PM

போட்டி தகவல்கள் 

Trending

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
  • நேரம் - மதியம் 2.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இங்கு களத்தில் நின்று விளையாடும் பேட்டர்கள் பெரிதளவில் ரன்களைக் குவிக்கலாம். மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் பெரிதாக இருப்பதால், பந்துவீச்சாளர்கள் எப்போது வேண்டுமானாலும் விளையாட்டில் கம்பேக் கொடுப்பார்கள். மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 160 ரன்களாக உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • குஜராத் டைட்டன்ஸ் - 02
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 01

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், அஸ்மத்துல்லா ஒமர்சாய், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், சாய் கிஷோர், மோகித் சர்மா, நூர் அகமது, சந்தீப் வாரியர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக், ராஜத் பட்டிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங், கர்ண் சர்மா, லோக்கி ஃபெர்குசன், முகமது சிராஜ், யாஷ் தயாள்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), டேவிட் மில்லர், ஃபாஃப் டு பிளெசிஸ், ராஜத் பட்டிதார், ஷுப்மான் கில் (துணை கேப்டன்), சாய் சுதர்ஷன்
  • ஆல்ரவுண்டர் - வில் ஜாக், கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - மோஹித் சர்மா, ரஷித் கான்.

GT vs RCB Dream11 Prediction, Today Match Prediction, Today Match GT vs RCB, GT vs RCB Dream11 Team, Fantasy Cricket Tips, GT vs RCB Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Gujarat Titans vs Royal Challenger Bangaluru

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement