ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் இரு அணிகளும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம் - நரேந்திர மோடி மைதானம், அஹ்மதாபாத்
- நேரம் - மதியம் 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
ஷுப்மன் கில் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொண்டுள்ள குஜராத் அணி, முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தினாலும், அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணியிடம் உதைவாங்கியது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஷுப்மன் கில், விருத்திமான் சஹா, சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா போன்ற வீரர்கள் உள்ளது அணியின் பலமாக பார்க்கப்பட்டாலும், கடந்த போட்டியில் இவர்களில் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை என்பது சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரஷித் கான், சாய் கிஷோர், மோஹித் சர்மா ஆகியோரது பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அதேசமயம் உமேஷ் யாதவ், ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் சந்தீப் வாரியர், ஜோஷுவா லிட்டில் போன்ற வீரர்கள் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதுபோக அதிரடி வீரர் ஷாருக் கான் இப்போட்டியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினாலும், அடுத்த போட்டியில் வலிமையான பந்துவீச்சு துறையை வைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்களை குவித்து ஐபிஎல் தொடர் வரலாற்றி அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையுடன், அபார வெற்றியையும் பதிவுசெய்து மிரட்டியது. அதிலும் அணியில் புதிதாக இணைந்த டிராவிஸ் ஹெட் தனது முதல் போட்டியிலேயே 18 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்ர்.
அவருக்கு துணையாக அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் கடக்க, இறுதியில் ஹென்ரிச் கிளாசென் வழக்கம்போல் சிக்சர் மழை பொழிந்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் அந்த அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் பந்துவீச்சில் அந்த அணி கடந்த போட்டியில் சில மாற்றங்களை செய்தது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் அசத்திய நடராஜனுக்கு கடந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆனால் கடந்த போட்டியில் விளையாடிய உம்ரான் மாலிக், ஜெய்தேவ் உனாத்கட் போன்ற வீரர்களும் ரன்களை வாரி வழங்கினர். இதனால் நாளைய போட்டியில் நடராஜன் மீண்டும் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்களும், நட்சத்திர பந்துவீச்சாளர்களும் இருப்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பிட்ச் ரிப்போர்ட்
நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இங்கு களத்தில் நின்று விளையாடும் பேட்டர்கள் பெரிதளவில் ரன்களைக் குவிக்கலாம். மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் பெரிதாக இருப்பதால், பந்துவீச்சாளர்கள் எப்போது வேண்டுமானாலும் விளையாட்டில் கம்பேக் கொடுப்பார்கள். மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 160 ரன்களாக உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 03
- குஜராத் டைட்டன்ஸ் - 02
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 01
உத்தேச லெவன்
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம்.
உத்தேச லெவன்
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கே), விஜய் சங்கர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், சாய் கிஷோர், உமேஷ் யாதவ், மோஹித் சர்மா, ஸ்பென்ஸர் ஜான்சன்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, நடராஜன்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- கீப்பர்கள் - ஹெரிச் கிளாசென் (கேப்டன்), விருத்திமான் சாஹா
- பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில் (துணைக்கேப்டன்), சாய் சுதர்சன்
- ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், அஸ்மத்துல்லா ஒமர்சாய்
- பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், மோஹித் சர்மா, ரஷித் கான்
GT vs SRH IPL 2024 Dream11 Prediction, Today Match GT vs SRH, GT vs SRH Dream11 Team, Fantasy Cricket Tips, GT vs SRH Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Gujarat Titans vs Sunrisers Hyderabad
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now