
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடைபெறும் போட்டிகளில் தான் வழக்கமாக சர்ச்சைகள் அதிகரிக்கும். ஆனால் இம்முறை ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. இதற்கு ஐபிஎல் டிரேடிங் முறையை பின்பற்றாமல் சில அணிகள் ஐபிஎல் நிர்வாக குழு அமைத்த விதிகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறை மும்பை அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி ரூ.15 கோடி பணம் கொடுத்து குஜராத் அணியிடம் இருந்து ஒப்பந்தம் செய்தது. இதற்கு ஐபிஎல் நிர்வாக குழுவும் அனுமதியளித்துள்ளது. அந்த விதிமுறையின் படியே டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்யப்படும் வீரர்களுக்கும், அந்த அணிக்கும் ஒப்பந்தம் செய்யும் அணி மிகப்பெரிய தொகையை கொடுக்கும். அதில் 10 முதல் 50 சதவிகிதம் வரை சம்மந்தப்பட்ட வீரருக்கும் அளிக்கப்படும்.
இந்நிலையில் தான் குஜராத் அணியின் முகமது ஷமியிடம் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்வதற்காக சில அணிகள் முயற்சிப்பதாக குஜராத் அணியின் சிஓஓ அரவிந்தர் சிங் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.