
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் சுப்மான் கில் விலகப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு காரணம் ஐபிஎல் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று டிவிட்டரில் ஒரு பதிவு செய்திருந்தது.
அதில் “சுப்மான் கில்லுடன் பயணித்தது மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் உங்களுடைய நினைவுகளுக்கு மிக்க நன்றி. உங்களுடைய அடுத்த பயணம் சிறப்பாக அமையட்டும்” என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு சுப்மான் கில்லும் நன்றி தெரிவப்பது போல் ஸ்மைலி பயன்படுத்தினார். இதனால் சுப்மான் கில், குஜராத் அணியை விட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஒருவேளை ஐபிஎல் வீரர்களை பரிமாற்றம் செய்யும் டிராஃப்ட் முறையில் கில் சிஎஸ்கே அணிக்கு வரப்போகிறாரா என்று சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ஏனென்றால் குஜராத்தை சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் குஜராத்துக்கு ஜடேஜா திரும்ப திட்டமிட்டுள்ளதால் அவருக்கு பதிலாக சுப்மான் கில்லை சிஎஸ்கே மாற்றிக் கொள்ளும் என்று கருதப்பட்டது. இதனால் முதலில் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.