
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொட்ரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருவது.
அந்த அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 2 தோல்விகள் என 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனையடுத்து அந்த அணி அடுத்ததாக நாளை டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராட் டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தாம் செய்யப்பட்டிருந்த கிளென் பிலீப்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிவுள்ளார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது கிளென் பிலீப்ஸ் காயத்தை சந்தித்திருந்தார். இதனால் அவர் மைதானத்தில் இருந்தும் பாதியிலேயே வெளியேறினர்.