ஐஎல்டி20: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட்டுள்ள இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் பால் ஸ்டிர்லிங் 20 ரன்களையும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 26 ரன்களையும் தவிர மற்றவீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். கல்ஃப் ஜெயண்ட்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய சஞ்சித் சர்மா, கிறிஸ் ஜோர்டன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Trending
இதையடுத்து இலக்கை துரத்திய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் ரெஹன் அஹ்மத் 7 ரன்களிலும், அடுத்து வந்த ஒல்லி போப் 18, எராஸ்மஸ் 1, ஹெட்மையர் 14 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான ஜேம்ஸ் வின்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், 44 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரிகளை விளாசி 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 14.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now