Advertisement
Advertisement

ஆட்டத்தின் முடிவை மாற்றிய ரன் அவுட்; வரலாகும் காணொளி!

நேபாள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 15, 2024 • 13:49 PM
ஆட்டத்தின் முடிவை மாற்றிய ரன் அவுட்; வரலாகும் காணொளி!
ஆட்டத்தின் முடிவை மாற்றிய ரன் அவுட்; வரலாகும் காணொளி! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்கா - நேபாள் அணிகள் மோதிய ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று செயின்ட் வின்செண்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரீஸா ஹென்றிக்ஸைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரீஸா ஹென்றிஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களை குவித்தார். நேபாள் அணி தரப்பில் சிறப்பாக பந்துவிசிய குஷால் புர்டெல் 4 விக்கெட்டுகளையும், திபேந்திர சிங் ஐரி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணியிலும் குஷால் புரெடல், கேப்டன் ரோஹித் பௌடல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

Trending


அதன்பின் இணைந்த ஆசிஃப் ஷேக் - அனில் ஷா இணை அதிரடியாக விளையாடியதுடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினார். ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்களாக இலக்கை எட்ட முடியாததால் நேபாள் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை 114 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் ஒரு ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் போராடி தோல்வியைத் தழுவியுள்ளது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இந்நிலையில் இப்போட்டியின் கடைசி பந்தில் நேபாள் அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹென்ரிச் கிளாசெனின் அபாரமான ரன் அவுட்டின் மூலம் குல்ஷன் ஷா விக்கெட்டை இழக்க, தென் ஆப்பிரிக்க அணியானது ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில், இப்போட்டியின் பரபரப்பான கடைசி ஓவர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement