
Gurbaz's 70 Brings Delhi Bulls Back To Winning Ways In Abu Dhabi T10 League (Image Source: Google)
டி10 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் நார்த்தன் வாரியர்ஸ் - டெல்லி புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி புல்ஸ் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய நார்த்தன் வாரியர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோமன் பாவல் 56 ரன்களைச் சேர்த்தார்.
பின்னர் இலக்கைத் துரத்திய டெல்லி புல்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய குர்பாஸ் அரைசதம் அடித்ததுடன் 70 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.