ENG vs WI, 1st Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இரு அணி வீரர்களும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 10ஆம் தேதி புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Trending
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்திய அணியில் கஸ் அட்கின்ஸன் மற்றும் ஜேமி ஸ்மித் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் ஷோயப் பசீர் உள்ளிட்ட வீரர்களுக்கும் இப்போட்டியில் விளையாட இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் சமீப காலங்களாக பந்துவீச்சாமல் இருந்து வரும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இப்போட்டியில் ஆல் ரவுண்டராக செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
Win Big, Make Your Cricket Tales Now