
Guyana Amazon Warriors vs Barbados Royals Qualifier 2, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், கீரன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில் இத்தொடரில் இரண்டாவதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள்பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கும், தோல்வியடையும் அணி மூன்றாம் இடத்திற்கும் செல்லும் என்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்ற எதிர்பார்ப்புகல் அதிகரித்துள்ளனர்.
GUY vs BR Qualifier 2: Match Details
- மோதும் அணிகள்- கயானா அமேசன் வாரியர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ்
- இடம் - புரோவிடன்ஸ் மைதானம், கயானா
- நேரம் - அக்டோபர் 5, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)