
Had Doubts In Mind When I Was Not Playing, Says Kuldeep Yadav (Image Source: Google)
இந்தியா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்தநிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நேற்றைய போட்டியில் ரீ எண்ட்ரீ கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்திய குல்தீப் யாதவ், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிம் இருந்து கிடைத்த ஊக்கமே தனது சிறப்பான பந்துவீச்சிற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய குல்தீப் யாதவ்“பதட்டமும், நெருக்கடியும் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும். நான் நீண்ட இடைவேளைக்கு பிறகு விளையாடுகிறேன். இந்த போட்டிக்கு முன்னதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் நிறைய விசயங்கள் குறித்து ஆலோசித்தேன்.