
Hampshire Hawks Signs D'Arcy Short For 2021 T20 Blast (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் டி ஆர்சி ஷார்ட். இவர் பிக் பேஷ் லீக் கில் ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து உள்ளூர் டி20 தொடரான டி20 பிளாஸ்ட் தொடரில் ஹாம்ப்ஷையர் ஹாக்ஸ் அணிக்காக விளையாட டி ஆர் சி ஷார்ட் இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷார்ட்,“ஹாம்ப்ஷையர் ஹாக்ஸைப் போன்ற வரலாற்றைக் கொண்ட ஒரு கிளப்பில் சேர நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் தி ஏகாஸ் பவுல் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவதற்காக காத்து கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.