
Hanuma Vihari, Abhimanyu Easwaran among seven Indians to participate in DPL 2022 (Image Source: Google)
வங்கதேசத்தில் நடைபெறும் 50 ஓவர் டாக்கா பிரீமியர் லீக் (டிபிஎல்) போட்டியில் விஹாரி உள்பட ஏழு இந்திய வீரர்கள் விளையாடவுள்ளார்கள்.
விஹாரி, அபிமன்யூஸ் ஈஸ்வரன், பர்வேஸ் ரசூல், பாபா அபரஜித், அசோக் மெனேரியா, சிராக் ஜானி, குரிந்தர் சிங் ஆகிய ஏழு வீரர்களையும் ஐபிஎல் ஏலத்தில் எந்தவொரு அணியும் தேர்வு செய்யவில்லை. இதையடுத்து இன்று முதல் தொடங்கியுள்ள வங்கதேசத்தின் லிஸ்ட் ஏ போட்டியான டிபிஎல் போட்டியில் இவர்கள் ஏழு பேரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
விஹாரி, ஈஸ்வரன், அபரஜித், மெனேரியா, ரசூல் ஆகிய வீரர்கள் ஏற்கெனவே டிபிஎல் போட்டியில் 2019-20இல் கலந்துகொண்டார்கள். தினேஷ் கார்த்திக், மனோஜ் திவாரி, யூசுப் பதான் ஆகிய இந்திய வீரர்களும் இதற்கு முன்பு டிபிஎல் போட்டியில் விளையாடியுள்ளார்கள்.