
Hanuma Vihari omitted from the Test squad against New Zealand (Image Source: Google)
இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடரானது வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த டி20 தொடருக்கு அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோஹித், ரிஷப் பண்ட், முகமது ஷமி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியது.