
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்த வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இடம்பெற்றது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா "ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக அஷ்வின் விளையாடி வருகிறார். அவர் சிறப்பாகவும் பந்து வீசுகிறார். டி20 உலகக் கோப்பையில் எங்களுக்கு ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவைப்பட்டார். ஐபிஎல்லின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கு விக்கெட்டுகள் மெதுவாகவும் இருக்கலாம். ஸ்பின்னர்களுக்கு அந்த விக்கெட் உதவும். எனவே அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை. வாஷிங்டன் சுந்தர் காயமடைந்த வீரர்களின் பட்டியலில் இருக்கிறார். அஸ்வினுக்கு அவரது செயல்திறன் காரணமாக தான் அணியில் இடம் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மீண்டும் இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்ட பிறகு அஸ்வின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.