Advertisement

தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், இதைத்தான் எனது அணிக்கு கூற விரும்புகிறேன்- தசுன் ஷனகா!

எனது விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் டி20 போட்டிகளில் முழுமையாக பந்துவீச முடியவில்லை என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.

Advertisement
Happy with my performance, could not bowl due to finger injury: SL skipper Shanaka!
Happy with my performance, could not bowl due to finger injury: SL skipper Shanaka! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 08, 2023 • 10:48 AM

இந்தியா - இலங்கை அணிகள் விளையாடிய கடைசி டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்றார் போல, சூரியகுமார் யாதவ் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட 51 பந்துகளில் 112 ரன்கள் அடித்து, மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 08, 2023 • 10:48 AM

சூரியகுமார்-க்கு முன்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 35 ரன்கள் அடித்து நல்ல டெம்போ செட் செய்தார். கடைசியில் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 21 ரன்களை வெறும் 9 பந்துகளில் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 228/5 ரன்கள் அடித்திருந்தது.

Trending

ராஜ்கோட் மைதானத்தில் 229 ரன்கள் இலக்கு என்பது சைஸ் செய்யக்கூடியது தான். ஆகையால் நம்பிக்கையுடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இலங்கை பேட்ஸ்மென்கள் குஷால் மெண்டிஸ் 23 ரன்கள், தனஞ்செய டி சில்வா 22 ரன்கள் மற்றும் கேப்டன் சனக்கா 23 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர்.

மற்ற இலங்கை வீரர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. அவர்களும் சொற்பரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆகினர். இறுதியில் 137 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் ஆனது. 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது.

போட்டி முடிந்தபின் பேசிய இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா, “இந்த சீரியஸ்-க்கு வருவதற்கு முன் நான் ஃபார்மில் இல்லை. தொடரின் ஆரம்பத்திலேயே மீண்டும் ஃபார்மிற்கு வந்தது மற்றும் பர்ஃபார்மன்ஸ் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் டி20 போட்டிகளில் முழுமையாக பந்துவீச முடியவில்லை. 

ஒருநாள் தொடரின்போது மீண்டும் பந்துவீச தயாராகியுள்ளேன். வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக, மிகச்சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவிற்கு வாழ்த்துக்கள். தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இதைத்தான் எனது அணிக்கு கூற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement