
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். இவர் தற்போது பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை ஆலோசகருமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுவருதாக ஹர்பஜன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அதனுடைய மாவட்ட நிர்வாகிகளுக்கு ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் அந்த கடிதத்தில் சங்கத்தில் நடைபெற்று வரும் மோசடிகள், சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவை குறித்து விவரமாக ஹர்பஜன்சிங் எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
150 உறுப்பினர்களை வாக்களிக்கும் உரிமையோடு சங்கத்தில் சேர்க்க பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் முயற்சித்து வருவதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு சாதகமான பல அம்சங்கள் நடைபெறும் என்று ஹர்பஜன் கடிதத்தில கூறியுள்ளார். ஆனால் இதனை பொதுக்குழுவின் சம்மதம் ஏதுமில்லாமல், சங்க நிர்வாகிகள் நடைமுறைப்படுத்த முயற்சித்து வருவதாகவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.