
Harbhajan Singh demands Ishan Kishan's appointment as opening batter in T20Is (Image Source: Google)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. அடுத்ததாக டி20 தொடர் நடக்கவுள்ளது. இதன் முதல் போட்டி நாளை ஈடன் கார்டனில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த டி20 தொடரில் ரோஹித்துடன் யாரை தொடக்க வீரராக இறக்கலாம் என்று முன்னாள் சுழல் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “என்னை பொறுத்தமட்டில் ரோஹித்துடன் இஷான் கிஷன் தான் தொடக்க வீரராக இறங்க வேண்டும். இஷான் கிஷனை ஓபனிங்கிற்கு தயார்படுத்தவெல்லாம் தேவையில்லை. அவர் ஏற்கனவே தயாராகத்தான் இருக்கிறார்.