
உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியாக வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னே இயற்கை எய்திய நிலையில், சைமண்ட்ஸ் மரணம் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது.
சைமண்ட்ஸ் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சக ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட், “இந்த செய்தி மிகவும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கையான, நட்பான, அனைவரிடமும் சகஜமாக பழகும் நண்பன் குறித்து தற்போது நினைத்து பார்க்கிறேன். நண்பருக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“காலை எழுந்ததும் இந்த செய்தி பெரிய இடி போல் இறங்கியது, உன்னை மிஸ் செய்யப்போகிறேன் நண்பா” என்று ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லஸ்பி கூறியுள்ளார். “இதயம் நொறுங்கிவிட்டது. 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற மற்றொரு ஹிரோவையும் ஆஸ்திரேலியா இழந்துவிட்டதாக” மைக்கேல் பெவன் கூறியுள்ளார்.