
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 69ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்ரீட்சை நடத்தின. இதில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையிலும் மும்பை அணி களமிறங்கியது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. 201 ரன்கள் இலக்கை சேஸ் செய்த மும்பை அணிக்கு ரோகித் சர்மா 56 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் கொடுத்தார். கேமரூன் கிரீன் 47 பந்துகளில் சதம் விளாசி போட்டியை அபாரமாக பினிஷ் செய்தார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் கேமரூன் கிரீன்(100) மற்றும் சூரியகுமார் யாதவ்(25) இருவரும் களத்தில் நின்றனர்.
இதில் 201 ரன்கள் இலக்கை 18 ஓவர்களில் சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 18ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் பவுண்டரி அடிக்க வாய்ப்பிருந்தும், 99 ரன்களில் இருந்த கிரீன் சதமடிக்க வேண்டுமென்று சிங்கிள் எடுத்துக்கொடுத்தார். கடைசியில் கிரீன் தனது முதல் ஐபிஎல் மற்றும் டி20 சதத்தை அடித்தார்.