ஹர்திக் பாண்டியா பங்கேற்காதது குறித்து ரஷித் கான் விளக்கம்!
கேகேஆருக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடாதது குறித்து ரஷித் கான் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சிசன் தற்போது நடைபெற்று வருகிறது . இதில் இன்று நடைபெறும் 13ஆவது ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் குஜராத் அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது .
இந்தப் போட்டி தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அபாரமாக வெற்றி பெற்ற குஜராத் அணிய புள்ளிகள் பட்டியலில் முதல் முதலிடம் வகித்து வந்தது . ஆனால் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் பெற்ற மிகப்பெரிய வெற்றியால் குஜராத் அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது எனினும் அந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் முதலிடத்திற்கு செல்வதற்கு முயற்சி செய்யும் .
Trending
இந்நிலையில் டாஸ் வென்ற குஜராத்த அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. இன்று அந்த அணிக்கு கேப்டனாக ரஷீத் கான் பதவியேற்று இருக்கிறார். இதன் மூலம் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது உறுதியாக இருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக அபிநவ் மனோகரன் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் .
ஹர்திக் பாண்டியா ஏன் விளையாடவில்லை என குஜராத் அணியின் கேப்டன் ரஷித் கான் இடம் கேட்கப்பட்டது . அதற்கு பதில் அளித்த ரஷித் கான், “அவர் உடல் நலம் சரியில்லாததால் இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. அணி நிர்வாகம் அவரை இந்த போட்டியில் பங்கேற்க வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை . இன்னும் நிறைய போட்டிகள் நாங்கள் ஆட வேண்டியுள்ளது அதனால் இந்தப் போட்டியில் அவர் ஆடவில்லை” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now