இந்திய அணியை வழி நடத்துவது ஒரு ஸ்பெஷலான உணர்வு - ஹர்திக் பாண்டியா
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்காமளித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகித்திருந்த இந்திய அணியானது நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை (4-1) நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி களமிறங்கிய விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவிக்கவே 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
Trending
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 100 ரன்களை மட்டுமே குவித்ததால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா, “இந்திய அணியை தலைமை தாங்கி வழி நடத்துவது என்பது ஒரு ஸ்பெஷலான உணர்வு. நான் தலைமையேற்று இந்திய அணி வெற்றி பெறும்போது அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே இந்த தொடரை வென்று கொடுத்து விட்டார்.
இன்னும் சில மாதங்களில் உலக கோப்பை தொடர் வர இருக்கிறது. எனவே நாங்கள் ஒரு நல்ல அணியாக தயாராக வேண்டியது அவசியம். தற்போது உள்ள இந்திய அணியில் உள்ள வீரர்கள் மிகவும் சுதந்திரமாக விளையாடி வருகின்றனர். இதுதான் புதிய இந்திய அணி. பயமற்ற ஆட்டத்தை எங்களது அணியின் வீரர்கள் தொடர்ந்து விளையாடு வருவதை நான் பார்த்து வருகிறேன்.
இதனால் தோல்வியடைந்தாலும் கவலை கிடையாது. நிச்சயம் இதேபோன்று பாசிட்டிவ்வான ஆட்டத்தை அதிரடியாக விளையாடும் பட்சத்தில் இன்னும் ஸ்பெஷலான விஷயங்கள் நிச்சயம் நமது அணிக்கு வந்து சேரும்” என கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now