
Hardik Pandya breaks into top five in ICC rankings for T20I allrounders (Image Source: Google)
டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவர் இந்த பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி உள்ளார். 2ஆவது இடத்தில் வங்காளதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் நீடிக்கிறார். 3ஆவது இடத்தில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி உள்ளார்.
அதேபோல், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்திலும், ரிஸ்வான் 2ஆவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளார்.