
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற விண்டீஸ் அணி 2-0 என்ற நிலையில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் நேற்று மூன்றாவது போட்டியில் பலப்பரிட்சை நடத்தியது இந்திய அணி.
முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி குல்தீப் யாதவின் அபாரமான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 150 ரன்களுக்குள் சுருட்டிவிடலாம் என்ற நினைத்தபோது 19வது ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் இரண்டு சிக்சர்கள் கொடுத்து, 2 ஒய்டு பந்துகளை வீச ஒரே ஓவரில் 17 ரன்கள் சேர்த்தார் ரோவ்மன் பவல். இறுதியில் 159 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு டஃப் ஸ்கோரை விண்டீஸ் அணி.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் 1, 6 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற முதலிரண்டு போட்டிகளை போலவே ஆட்டம் கண்டது இந்தியா. பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தொடரில் சிறப்பாக ஆடிவரும் திலக்வர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் சூர்யகுமார் யாதவ் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்.