
இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்-ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதுகுப்பகுதியில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு பந்து வீசாமல் இருந்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது பந்து வீசுவார் என்று உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற ஹார்டிக் பாண்டியா ஒரு சில ஓவர்களை மட்டுமே அந்த தொடரில் வீசியது பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
மேலும் உலக கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோது பிசிசிஐ-யின் தலைமை தேர்தல் அதிகாரி சேத்தன் சர்மா பாண்டியா ஆல்ரவுண்டராக விளையாடுவார் என்றும் ஒவ்வொரு போட்டியிலும் பாண்டியா நான்கு ஓவர் வீசுவார் என்றும் கூறி அவரை அணியில் இணைத்தார். ஆனால் உலக கோப்பை தொடரில் வெகு சில ஓவர்கள் மட்டுமே அவர் வீசியதால் அந்த விசயம் பெரிய விவகாரமாக மாறியது.
இந்நிலையில் உலக கோப்பை தொடரில் தன்னை தேர்வு செய்தது குறித்து ஹார்திக் பாண்டியா தற்போது சில கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.