
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இந்த ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று இரண்டாவது போட்டியில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டியின் ஆடுகளம் போலவே இந்த போட்டியின் ஆடுகளமும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெறவில்லை. ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார். இந்நிலையில் தொடக்க வீரராக வந்த இஷான் கிஷான் அரை சதம் அடிக்க, மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 34 ரன்கள் எடுக்க, இந்த துவக்க ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்தது. இவர்களைத் தவிர இந்தியா அணியில் வேறு யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை.
முடிவில் இந்திய அணி 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோமரியோ செப்பர்டு மற்றும் மோட்டி இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் விக்கட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. ஆனாலும் அதற்கு அடுத்து வந்த சர்துல் தாக்கூர் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் எடுத்து தர, இந்திய அணி ஆட்டத்திற்குள் வந்தது.