
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெறித்தனமாக காத்திருந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா வெற்றி இலக்கை எட்ட, சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜடேஜா, கோலி போன்ற வீரர்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதே போல் என்னதான் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இந்த போட்டியில் இந்திய அணி செய்த சில தவறுகளையும் முன்னாள் வீரர்கள் பலர் சுட்டிக்காட்டி பேசி வருகின்றனர்.