Advertisement

தனது கேப்டன்களிடமிருந்து இதனைக் கற்க வேண்டும் - ஹர்திக் பாண்டியா!

தோனி, கோலி, ரோஹித் ஆகிய மூவரின் கேப்டன்சியிலும் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா, அவர்களிடமிருந்து என்னென்ன விஷயங்களை எடுத்துக்கொண்டு செயல்படுத்த விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Hardik Pandya On Whether He’ll Bowl For Ahmedabad In IPL 2022
Hardik Pandya On Whether He’ll Bowl For Ahmedabad In IPL 2022 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 01, 2022 • 06:04 PM

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குகின்றன. அதனால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் மெகா ஏலம் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக 2 புதிய அணிகளும் தலா 3 வீரர்களை எடுத்துள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 01, 2022 • 06:04 PM

லக்னோ அணி கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும், அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் எடுத்துள்ளன.

Trending

லக்னோ அணியை கேஎல் ராகுலும், அகமதாபாத் அணியை ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக இருந்து வழிநடத்தவுள்ளனர். ஹர்திக் பாண்டியா முதல் முறையாக கேப்டன்சி பொறுப்பை ஏற்று செயல்படவுள்ளார். 

இந்திய அணியில் தோனி, கோலி ஆகியோரின் கேப்டன்சியிலும், ஐபிஎல்லில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியிலும் ஆடியுள்ள ஹர்திக் பாண்டியா, அவர்களிடமிருந்து கேப்டன்சியில் என்னென்ன நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு தனது கேப்டன்சியில் செயல்படுத்தவுள்ளார் என்பதை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “விராட்கோலியிடமிருந்து ஆக்ரோஷம், எனர்ஜி ஆகிய விஷயங்களையும், தோனியிடமிருந்து நிதானத்தையும், ரோஹித்திடமிருந்து வீரர்களை சுயமாக முடிவெடுத்து அதை செயல்படுத்த அளிக்கும் சுதந்திரம் ஆகிய தன்மை என இவர்களிடமிருந்து இந்த மூன்றையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement