
அயர்லாந்து அணிக்கு எதிரான இருபது ஓவர் தொடரை இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்ற முதல் தொடரிலேயே ஹர்திக் பாண்டியா வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார்.
இதே போன்று ஐபிஎல் கோப்பையையும் முதல் சீசனிலேயே குஜராத் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா தட்டி சென்றார். இதன் மூலம் ரோhiத் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டன் என்ற பந்தயத்தில் ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுலை ஹர்திக் பாண்டியா ஓரங்கட்டியுள்ளார். ஒரு 6 மாதத்திற்கு முன்பு, ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் கழற்றிவிடப்பட்ட ஹர்திக், இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காமல் காயத்தால் அவதிப்பட்டார். தற்போது அடுத்த கேப்டன் என்ற லெவலுக்கு ஹர்திக் வளர்ந்துள்ளார்.
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “இறுதி ஓவரின் போது உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எந்த கவலையும் படவில்லை. நெருக்கடியில் சிக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். எதை பற்றியும் நினைக்காமல் அந்த தருணத்தில் முழு கவனத்தோடு இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.