Advertisement

நான் எப்பொழுதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகன் - ஹர்திக் பாண்டியா!

சேப்பாக்கத்தில் மீண்டும் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எம் எஸ் தோனி என்கின்ற பெயரால்தான் எங்களுக்கு எல்லா ஆதரவும் கிடைத்தது என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Advertisement
Hardik Pandya says he will always be CSK captain's fan!
Hardik Pandya says he will always be CSK captain's fan! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 23, 2023 • 12:30 PM

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் விளையாடிய இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 23, 2023 • 12:30 PM

அதன்படி முதலாவது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும், எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு போட்டிகளும் சென்னை சேப்பாக்கமிலுள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Trending

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் முதலாவது குவாலிஃபையர் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டி குறித்து, மகேந்திர சிங் தோனி குறித்தும் குஜராத் அணியின் கேப்டன்  ஹர்திக் பாண்டியா பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. 

இதுகுறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “நான் எப்பொழுதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகன். அவர் எனக்கு அன்பான நண்பர் மற்றும் சகோதரர். மகேந்திர சிங் தோனியை போன்ற ஒருவரை வெறுக்க நீங்கள் பிசாசாக இருக்க வேண்டும். சேப்பாக்கத்தில் மீண்டும் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எம் எஸ் தோனி என்கின்ற பெயரால்தான் எங்களுக்கு எல்லா ஆதரவும் கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement