நான் நீக்கப்படவில்லை, நீங்கியிருந்தேன் - ஹர்திக் பாண்டியா
இந்திய அணிக்கு திரும்புவது குறித்து ஹர்திக் பாண்டியா துணிச்சலான கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்திய அணியில் நீண்ட நாட்களாக இல்லாமல் இருந்த ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடர் மூலம் கம்பேக் கொடுத்தார். ஒரு கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தந்தது ஒருபுறம் இருந்தாலும், பேட்டிங் மற்றும் பவுலிங் என சிறப்பாக செயல்பட்டார்.
ஐபிஎல் 2022 தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் 487 ரன்கள் குவித்தார். குஜராத் அணியில் அதிக ரன் அடித்தவர் இவர்தான் ஆகும். பந்துவீச்சை பொறுத்தவரையில் 8 விக்கெட்களை வீழ்த்தினார். அதுவும் தேவையான நேரத்தில் 140+ கிமீ வேகத்தில் வீசி முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து மீண்டும் இந்திய அணிக்கு அவர் திரும்பியுள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “பழைய ஹர்திக் பாண்டியா மீண்டும் வந்துவிட்டேன். ரசிகர்களும் என்னை நம்ப தொடங்கியுள்ளனர். இனி இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. அதனை எதிர்நோக்கியுள்ளேன். குஜராத் அணிக்காக என்ன செய்தேனோ, அதை அப்படியே இந்திய அணிக்காகவும் செய்வேன்.
ரசிகர்கள் அனைவரும் நான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீக்கப்படவில்லை, நீங்கியிருந்தேன் என்பது தான் உண்மை. நான் கேட்டுக்கொண்டதற்காக நீண்ட நாட்கள் ஓய்வு கொடுத்த பிசிசிஐ-க்கு நன்றி. என்னை மீண்டும் வரவேண்டும் என வற்புறுத்தக்கூட இல்லை, நன்றி” எனத் தெரிவித்தார்.
இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் டாப் ஆர்டரில் களமிறக்கப்படுவாரா அல்லது மீண்டும் ஃபினிஷராக 6 அல்லது 7வது வீரராக களமிறங்குவாரா என்பது குழப்பமாக உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now