Advertisement

முதல் ஓவரிலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா; வைரல் கணொளி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமை, இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
முதல் ஓவரிலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா;  வைரல் கணொளி!
முதல் ஓவரிலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா; வைரல் கணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 11, 2023 • 09:07 PM

இந்திய கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பைக்குள் நுழைந்த பொழுது எக்கச்சக்க விமர்சனங்கள் இருந்தது. கூடவே சந்தேகங்களும் இருந்தது. இந்த நிலையில் ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதிய போட்டியில், மிக முக்கியமான பேட்ஸ்மேன்கள் அனைவரும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களிடம் சிக்கினார்கள்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 11, 2023 • 09:07 PM

இந்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் நேபாள் அணிக்கு எதிராக விளையாடிய பொழுது, பீல்டிங் மற்றும் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி இல்லை. அந்தப் போட்டியில் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் சிறப்பாக முடித்து இருந்தார்கள். இந்த பாசிட்டிவ் அடுத்து நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது எதிரொலித்தது. மிகச் சிறப்பான துவக்கத்தை ரோகித் சர்மா மற்றும் கில் இந்திய அணிக்கு கொடுத்தார்கள்.

Trending

இதனைப் பயன்படுத்தி விளையாடிய விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆசிய கோப்பையில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்னாக 233 ரன்களை பதிவு செய்து, இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவிக்க உறுதுணையாக இருந்தார்கள். மேற்கொண்டு பந்துவீச்சுக்கு வந்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும், தங்களுடைய மொத்த வித்தையையும் இறக்கி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை தடுமாற விட்டார்கள்.

பாகிஸ்தான் அணி ஜஸ்ட்பிரித் பும்ரா இடம் முதல் விக்கெட்டை இழந்தது. இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் விளையாட வந்தார். அவரையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் சோதித்தார்கள். அவர்தான் சந்தித்த பதினொன்றாவது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்தார்.

 

பவர் பிளேவில் 10 ஓவர்கள் முடிந்து பதினோராவது ஓவரை வீச ஹர்திக் பாண்டியா வந்தார். அவர் மிக அற்புதமாக பந்தை வெளியே எடுத்துக்காட்டி, அதற்கு அடுத்து பாபர் அசாம் எதிர்பார்க்காத விதத்தில் பந்தை உள்ளே கொண்டு வந்து, அவரை கிளீன் போல்ட் ஆக்கினார். என்ன நடந்தது என்று பாபர் அசாமுக்கு புரியவில்லை. அவர் 24 பந்தில் 10 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். தற்பொழுது மழை குறுக்கிட்டு இருப்பதால் போட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement