ஒரு கேப்டனாக இது போன்ற வெற்றியைத் தான் நான் எதிர்பார்க்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்கள். இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு தேவையான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது என ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நேற்று ட்ரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
அதனை தொடர்ந்து 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
Trending
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பேசிய கேப்டன் ஹார்டிக் பாண்டியா, "இது ஒரு ஸ்பெஷலான வெற்றி. ஒரு கேப்டனாக இது போன்ற வெற்றியைத் தான் நான் எதிர்பார்க்கிறேன். அதுவும் சர்வதேச கிரிக்கெட்டில் இதற்கு மேல் என்ன வேண்டும். ஒருவேளை நாங்கள் இந்த போட்டியில் தோற்று இருந்தால் மிகவும் வருத்தம் அடைந்து இருப்போம். ஆனால் நமது அணியின் வீரர்கள் இந்த போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதோடு நாங்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினோம்.
இந்த போட்டியில் ஒட்டுமொத்த அணியாக அணியில் உள்ள அனைவரது சிறப்பான செயல்பாடு காரணமாகவே இந்த வெற்றி நமக்கு கிடைத்ததாக நினைக்கிறேன். அதேபோன்று விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்கள். இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு தேவையான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்த போட்டியில் முதலில் நாங்கள் 350 ரன்கள் வரை எடுத்து விட்டதால் நிச்சயம் அவர்களை எளிதில் வீழ்த்தி விடுவோம் என்று தெரியும். ஆனால் ஒருநாள் போட்டிகளில் எவ்வளவு பெரிய ஸ்கோரையும் சேசிங் செய்ய முடியும். இருப்பினும் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி பவர் பிளேவிற்கு உள்ளேயே அவர்களை வீழ்த்தியதாக நினைக்கிறேன். அதன்பிறகு போட்டி 34ஆவது ஓவர் வரை போட்டி சென்றாலும் எங்களால் அவர்களை எளிதில் வீழ்த்த முடிந்தது" என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now