
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது உலக கோப்பை டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில், முதன்மை அணிகள் இன்னும் சில தினங்களில் மோத இருக்கின்றன.
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்து தற்போது பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. இந்த பயிற்சி போட்டிக்கு பிறகு இந்திய அணி 24-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மோத இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் நேற்று இந்திய அணி பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 189 ரன்களை இந்திய அணி 19 ஓவர்களில் சேஸிங் செய்து அசத்தியது. ஆனாலும் இந்தப் போட்டியில் விளையாடிய ஹார்டிக் பாண்டியா குறித்து ரசிகர்கள் தங்களது காட்டமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.