
இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை வென்று அசத்தியது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக 4ஆம் இடத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துளார்.
அதேசமயம் இந்த பட்டியலில் நேபாள் அணி வீரர் திபெந்திர சிங் ஐரீ இரண்டாம் இடத்தில் நீடிக்கும் நிலையில், முதலிடத்தில் இருந்து லியாம் லிவிங்ஸ்டோன் இரண்டு இடங்கள் பின் தங்கி 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் இலங்கை வீரர் வநிந்து ஹரங்கா 5ஆம் இடத்திற்கும், தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ரம் 10ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ள நிலையில், மர்கோ ஜான்சென் 65 இடங்கள் முன்னேறி 14ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.