AUS vs PAK, 2nd ODI: ஹாரிஸ் ராவுஃப் வேகத்தில் 163 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 163 ரன்களில் ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியிலும் அதிரடியாக தொடங்கிய ஃபிரேசர் மெக்குர்க் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட்டும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Trending
அதன்பின் களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 18 ரன்களிலும், மார்னஸ் லபுஷாக்னே 6 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியும் 101 ரன்னிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் களமிறங்கிய ஆரோன் ஹார்டி 14 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுக்கும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 13 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த ஆடம் ஸாம்பா தனது பங்கிற்கு 18 ரன்களைச் சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியானது 35 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹாரிஸ் ராவூஃப் 5 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
Win Big, Make Your Cricket Tales Now