மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வெற்றிபற்றது.
அதன்படி, இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மெக் லனிங் அதிரடியாக விளையாடி 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 92 ரன்களையும், ஷஃபாலி வர்மா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் தர்பபில் மேக்னா சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் பெத் மூனி 44 ரன்களிலும், தயாளன் ஹேமலதா ஒரு ரன்னிலும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 22 ரன்னிலும், டியான்டிரா டோட்டின் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்லீன் தியோல் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ரன்களையும், காஷ்வீ கௌதம் 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.