டி20 உலகக்கோப்பை: தனது சிறந்த லெவனை அறிவித்தார் ஹர்ஷா போக்லே!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே டி20 போட்டிகளுக்கான ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
டி20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர் நம்பவர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணியே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதால் நடைபெறும் உலகக் கோப்பை தொடர் மற்ற உலக கோப்பை தொடரை விட சற்று மாறுபட்ட ஒன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதன் காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் எந்த அணி வெற்றி பெறும்..? எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்..?, எந்த வீரர் இந்த தொடரில் அதிக ரன்கள் எடுப்பார்..?, எந்த வீரர் அதிக விக்கெட்டை வீழ்த்துவார்..? என்பது போன்ற சுவாரஸ்யமான கருத்துக்களை தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருகின்றனர்.
Trending
மேலும் டி20 உலக கோப்பை தொடரின் தலைசிறந்த ஆடும் லெவனையும் ஒவ்வொரு முன்னாள் வீரர்களும் தேர்ந்தெடுத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே., டி20 தொடருக்கான ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை தேர்ந்தெடுத்து தெரிவித்துள்ளார்.
அதில், “தொடக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் மற்றும் இங்கிலாந்து அணி நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லரையும் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் இவர்களை தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கிங் கோலி மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சனையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும் ஐந்தாவது பேட்டிங் லைன்-அப்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹசியையும், அணியின் ஆல்ரவுண்டர்களாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷாகித் அஃப்ரிடியையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல், நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லஷீத் மலிங்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சாமுவெல் பத்ரியையும் தேர்ந்தெடுத்த்துள்ளார்.
ஹர்ஷா போக்லே தேர்ந்தெடுத்த ஆல்டைம் சிறந்த லெவன்:
கிறிஸ் கெயில், ஜோஸ் பட்லர்,விராட் கோலி, கெவின் பீட்டர்சன், மைக்கேல் ஹஸ்ஸி, ஷேன் வாட்சன், ஷாஹித் அஃப்ரிடி, உமர் குல், ட்ரெண்ட் போல்ட், லசித் மலிங்கா, சாமுவேல் பத்ரி.
Win Big, Make Your Cricket Tales Now