
Harsha Bhogle picks his Test XI of 2021, includes Ashwin, Pant and Rohit Sharma (Image Source: Google)
இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. இவர் 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.
இவரது பிளேயிங் லெவனின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவையும், அவருடன் இலங்கையின் திமுத் கருணரத்னேவையும் தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்ளே, 3ஆம் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர இளம் வீரரான மார்னஸ் லபுசாக்னேவை தேர்வு செய்துள்ளார்.
மேலும் 4ஆம் வரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டையும், 5ஆம் வரிசையில் பாகிஸ்தானின் ஃபவாத் ஆலமையும், விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தையும் தேர்வு செய்துள்ளார்.