
இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் ட்விட்டரில் கருத்தைப் பதிவிட்டிருந்தார். அதில் “ இந்தியாவுக்கு வெளியேயேும், உள்ளேயும் என்னுடைய 15 வயதிலிருந்து அதிகமாகப் பயணித்திருக்கிறேன். நான் சிறுவயதிலிருந்து என் நிறத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் ஒருவிதமான எண்ணம் எனக்கு புதிராகவே இருந்தது.
கிரிக்கெட்டை நன்றாக அறிந்தவர்கள், புரிந்தவர்ளுக்கு இது நிச்சயம் புரியும். வெயில்காலத்திலும் வெயில் இல்லாத நேரத்திலும் நான் பயிற்சியில் இருந்திருக்கிறேன், விளையாடியிருக்கிறேன், நான் ஒருமுறைகூட வெயிலில் விளையாடியதற்காக நான் தோல் நிறம் குறைந்துவிட்டதாக வருத்தப்பட்டதில்லை.
நான் செய்வதை விரும்புகிறேன், சில விஷயங்களை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் வெளியே செலவிட்டிருக்கிறேன். நாட்டிேலயே அதிகமான வெப்பமான பகுதியான சென்னையிலிருந்து வந்தேன், என்னுடைய இளமைக்கால வாழ்க்கை பெரும்பகுதி கிரிக்கெட் மைத்தானத்திலேயே செலவிட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்