
"Have Faced...": What Imran Khan Told Pakistan Team After T20 World Cup Exit (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆரோன் ஃபிஞ்ச் தலைமை ஆஸ்திரேலியா, பாபர் ஆசம் தலைமை பாகிஸ்தானை அரையிறுதியில் வென்று இறுதியில் நியூசிலாந்தை சந்திக்கிறது.
பாகிஸ்தான் தோல்வி அந்த ரசிகர்களுக்கு வேதனை அளித்தாலும் இந்தத் தொடரில் பிரமாதமாக ஆடியதற்காக தலை நிமிர்ந்து நடப்போம் என்று பிரதமர் இம்ரான் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தோல்விக்கு ஆறுதல் தெரிவித்த அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், “பாபர் ஆசம் மற்றும் அணிக்கு, இப்போது நீங்கள் என்ன உணர்வீரர்கள், என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. கிரிக்கெட் களத்தில் இதே போன்ற ஏமாற்றங்களை நானும் சந்தித்திருக்கின்றேன்.