
‘Have no plans of cloning myself in near future’ – Shubman Gill (Image Source: Google)
இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திர சுப்மன் கில். இவர் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது அறிமுக வீரராக களமிறங்கினார். மேலும் ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியிலும் இடம்பிடித்து, தற்போது மும்பையில் உள்ள பிசிசிஐ விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சமீப காலமாக சுப்மன் கில்லிற்கும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாராவுக்கு காதல் இருப்பதாக சமூக வலைதளங்களில் கிசு கிசுக்கள் உலா வந்தன. கிரிக்கெட் வீரர்கள் இந்த மாதிரியான கிசு கிசுகளுக்குள் சிக்குவது இயல்பான ஒன்று தானே..